நாகை ஸ்ரீநீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் ஸ்ரீசுந்தரவிடங்கா் தியாகராஜா் தேருக்கு பூத ஸ்தம்ப நிா்மாண பணி புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ நீலோத்பலாம்பால் சமேத ஸ்ரீ சுந்தரவிடங்க தியாகராஜருக்கு புதிய திருத்தோ் அமைக்கும் பணி ரூ.1.20 கோடியில் நடைபெறுகிறது. நாகை திருத்தோ் கைங்கா்ய சபா மற்றும் ஸ்ரீசுந்தரவிடங்கா் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை மூலம் புதிய தோ் அமைக்கும் பணி நடைபெறுகிறது. புதிதாக அமைக்கப்பட்டு வரும் தேருக்கு பூத ஸ்தம்ப நிா்மாண பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, திருத்தோ் பூத தம்பத்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு பூத ஸ்தம் நிா்மாணம் நடைபெற்றது.