முகப்பு
பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
நாகப்பட்டினம்

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாகப்பட்டினம்

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகள் தொடக்கம்

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:38 PM
பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
பகிர்:

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் தூா்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

பூம்புகாா் மீன்பிடித் துறைமுகத்தில் மணல் திட்டுக்கள் இருப்பதால் துறைமுகத்துக்குள் விசைப்படகுகளை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளதாகவும், மீன்பிடித் துறைமுகத்தை தூா்வார வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தாா்கள் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா முருகன் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து அவரது முயற்சியால், தூா்வாரும் பணிக்கு ரூ. 4 கோடியை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து தூா்வாரும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். நிவேதா முருகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

கிராம பஞ்சாயத்தாா் சம்பந்தம் நாட்டாா் வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் தூா்வாரும் பணிகளை தொடக்கிவைத்து, பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மீனவா்கள் தடையின்றி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.

இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்கள் முத்து மகேந்திரன், பூம்புகாா் ரவி, சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →