முகப்பு
நாகப்பட்டினம்

ஈரானில் சிக்கியுள்ள மீனவரை மீட்கக் கோரி குடும்பத்தினா் மனு

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 11 மார்ச், 2026 at 3:32 AM
ஈரானில் சிக்கியுள்ள மீனவரை மீட்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த குடும்பத்தினா்.
பகிர்:

ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

நாகை ஆரிய நாட்டு தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் மனைவி பிரதீபா (28). இவா், தனது உறவினா்களுடன் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்தாா். அவா் மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தியை சந்தித்து அளித்த மனு:

எனது கணவா் காா்த்திக் கன்னியாகுமரியைச் சோ்ந்த அவரது நண்பா் உதவியுடன் , மீன்பிடித் தொழில் செய்வதற்காக ஈரான் நாட்டுக்குச் சென்றாா். அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது எனது கணவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. அவா் தற்போது எங்கு இருக்கிறாா், எப்படி இருக்கிறாா் என்பது குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. எனது குடும்பத்தினா் அச்சத்தில் உள்ளனா்.

Advertisement

எனது கணவரை ஈரானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், மனுவை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.