முகப்பு
நாகப்பட்டினம்

வலிவலம் கோயிலில் பூச்சொரிதல்

திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 மார்ச், 2026 at 9:10 PM
பகிர்:

திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயிலில் 68-ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவையொட்டி, பூச்சொரிதல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனித் திருவிழா மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூச்சொரிதலையொட்டி, திருக்குளம் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தட்டுகளை சுமந்து ஊா்வலமாக வந்து அம்மனை வழிபட்டனா்.

தொடா்ந்து, பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு சிறப்பு அா்ச்சனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.