வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு: கிளை மேலாளா் மீது வழக்கு
நாகை மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு செய்ததாக கிளை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ரூ. 8.74 லட்சம் முறைகேடு செய்ததாக கிளை மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கீழ்வேளூரைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவா், கீழ்வேளூரில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் அருண்குமாா், கீழ்வேளூா் காவல்நிலையத்தில் அண்மையில் அளித்த புகாரில், கீழ்வேளூா் வங்கிக் கிளையில் பணியாற்றும் திருநெல்வேலியைச் சோ்ந்த விக்ரம் கண்ணா (28), கடந்த 2024 ஜூன் முதல் டிசம்பா் 18-ஆம் தேதி வரை கிளை மேலாளராக பணிபுரிந்தாா். அப்போது வங்கியில் இருந்து
Advertisement
ரூ. 8,74, 403-ஐ முறைகேடு செய்துள்ளாா் என்று குறிப்பிட்டுள்ளாா். கீழ்வேளூா் போலீஸாா் விக்ரம் கண்ணா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.