திருவாரூர்

ஆக.10-இல் மருத்துவ மதிப்பீட்டு முகாம்

தினமணி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஆக.10 (புதன்கிழமை) காலை 9 மணிக்கு முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முகாமில் மனநல மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், காது,மூக்கு,தொண்டை நிபுணர், கண் மருத்துவர் ஆகிய சிறப்பு மருத்துவக் குழு மதிப்பீடு செய்து மாற்றுத்திறன் குறைவான குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயன் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.

எனவே, ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தொடர்புக்கு 9788859165, 9698760540 என்ற செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT