திருவாரூர்

மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா: தீக்குண்டத்தில் தவறி விழுந்து 20 பேர் காயம்

DIN

நன்னிலம் அருகே தென்குடி மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தீமிதி விழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்து 20 பேர் தீக்காயமடைந்தனர்.
நன்னிலம் அருகே தென்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டிருந்தனர்.
தீமிதி விழாவின்போது காத்தவராய சுவாமியை சப்பரத்தில் வைத்து பக்தர்கள் தூக்கிக்கொண்டு அப்படியே தீக்குண்டத்தில் இறங்குவார்கள். சுவாமி சப்பரத்தை சுமார் 30 பக்தர்கள் தூக்கிக்கொண்டு தீக்குண்டத்தில் இறங்கும்போது எதிர்பாராத விதமாக தீயில் விழுந்து காயமடைந்தனர். தீக்குண்டத்தில் விழுந்தவர்களை மீட்டு நன்னிலம், திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் செந்தில் (40), விசுவநாதன் (37), தமிழரசன் (30), ரெங்கநாதன் (25), ரத்தினவேல் (35), விக்னேஷ் (25), சந்திரசேகர் (45), ராஜேஷ் (25), பிரபு (24), சந்தோஷ் (20) உள்ளிட்ட 20 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நன்னிலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்
டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT