திருவாரூர்

திருவாரூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தொடக்கம்

DIN

தமிழ்நாடு கேரம் கழகம், திருவாரூர் மாவட்ட கேரம் கழகம் சார்பில், 12 மற்றும் 14 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான 59-ஆவது கேரம் விளையாட்டுப் போட்டிகள்  திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆக. 15) வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாள் போட்டியை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.
போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆடவர், மகளிர் என போட்டிகள் தனித் தனிப் பிரிவாக நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் 12 வீரர்கள் தேசியப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
திருவாரூரில் முதல் முறையாக மாநில அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. முதல் சுற்றுப் போட்டியில் சென்னை, திருவாரூர், மதுரை வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT