திருவாரூர்

கருணாநிதி பிறந்த நாள் விழாவில் 60 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

DIN

திமுக தலைவர் மு. கருணாநிதியின் 94- ஆவது பிறந்த நாளான ஜூன் 3- ம் தேதி பிறந்த 60 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஆடைகள் சனிக்கிழமை திருவாரூரில் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்தில் மு. கருணாநிதியின் 94- ஆவது பிறந்த நாள் மற்றும் சட்டப் பேரவை வைர விழா ஜூன் முதல் வாரத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொரடாச்சேரி, கோட்டூர், கூத்தாநல்லூர், திருவாரூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 3- ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு திருவாரூரில் சனிக்கிழமை தங்க மோதிரம் மற்றும் ஆடைகள், ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர். ரஜினிசின்னா, நகரச் செயலர் எஸ். பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT