திருவாரூர்

காய்கறிப் பயிர்களில் உயர் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான 3 நாள் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர்  ரெ.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டத்துக்கேற்ற காய்கறிகளை பயிரிடுதல், அவற்றில் களை எடுத்தல், நீர் மேலாண்மை குறித்து விவரிக்கப்பட்டது. நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் பேட்ரிக் ஜஸ்பர், வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு மீனா, தோட்டக் கலை உதவிப் பேராசிரியர் வெ. சிவகுமார், வேளாண் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் அ.காமராஜ் உள்ளிட்டோர் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT