திருவாரூர்

ஆழித்தேரோட்டம்: ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: ஆட்சியர் ஆய்வு

DIN

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் நான்கு வீதிகளில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மே 29-ஆம் தேதியும், அதற்கு முன்னதாக மே 28-ஆம் தேதி விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்காக தேர்க் கட்டும் பணி மற்றும் தேரோடும் வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT