முகப்பு
திருவாரூர்

கூத்தாநல்லூரில் வட்டாட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தாழ்வானப் பகுதிகளை வட்டாட்சியர் செல்வி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தாழ்வானப் பகுதிகளை வட்டாட்சியர் செல்வி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 3 நாள்களாக திருவாரூர்  மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட குடிதாங்கிச்சேரி தெற்கு சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதைப் பார்வையிட்டார். தொடர்ந்து, சித்தாம்பூர், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து வட்டாட்சியர் செல்வி கூறியது:
வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால், கூத்தாநல்லூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்டவை தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் அளவுக்கு  கரையோரத்தில் மணல்  மூட்டைகளும்  அடுக்கி வைக்கப்பட்டுள்ளன  என்றார்.
ஆய்வின்போது, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்,  வருவாய் ஆய்வாளர் ரா ஜேஸ்வரி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →