பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்புப் பணி
மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையம் சார்பில், பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
திருவாரூர்பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்புப் பணி
மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையம் சார்பில், பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை துணைமின் நிலையம் சார்பில், பைங்காநாடு கிராமத்தில் மின் பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மின் விபத்துக்களை தவிர்க்கவும், தடையின்றி மின் விநியோகம் செய்யவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி மின்துறை சார்பில் மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருமக்கோட்டையை அடுத்த பைங்காநாடு கிராமத்தில், மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை வெட்டுதல், பழுதான மின் கம்பங்கள், மின் கம்பிகளை மாற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் வியாழக்கிழமை பொய்த மழையினூடே ஈடுபட்டனர். இப்பணிகளை மன்னார்குடி மின்வாரிய செயற்பொறியாளர் கி. ராதிகா ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.
இதுபோன்ற பராமரிப்பு பணிகள் அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் தெரிவித்தார்.