திருவாரூர்

டிசம்பர் இறுதி வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்: மருந்தாளுநர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ்

DIN

தமிழக அரசு ஏற்றுக்கொண்ட மருந்தாளுநர்களின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தாவிட்டால், டிசம்பர் மாத இறுதி வாரத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். சங்கத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவில், செய்தியாளர்களிடம் கோவிந்தராஜ் கூறியதாவது:
மருந்தாளுநர்கள் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுகொண்டாலும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழகம் முழுவதும் 40 சதவீதம் மருந்தாளுநர்கள் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு நிரப்பாததைக் கண்டித்து வரும் 23-ஆம் தேதி சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டமும், டிச. 23-ஆம் தேதி சிறு விடுப்பு எடுக்கும் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்தப் போராட்டங்களுக்குப் பின்னரும், மருந்தாளுநர்களின் கோரிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தாவிட்டால், டிசம்பர் மாத இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றார் கோவிந்தராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT