முகப்பு
திருவாரூர்

வீட்டுத்தோட்டம் செயல் விளக்கப் பயிற்சி

திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து  வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியை செவ் வாய்க்கிழமை அளித்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் இணைந்து  வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சியை செவ் வாய்க்கிழமை அளித்தது.
 மக்கும் குப்பைகளைத் தரம் பிரித்து வீடுகளில் உரக்குழி அமைத்து மக்கும் குப்பைகளைஅதில் சேகரித்து  இயற்கைமுறையில் மக்கச் செய்து அவற்றை வீட்டு காய்கறித் தோட்டம்,  மாடி வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்து பயன்படுத்தலாம்.  பொதுமக்கள்  உரக்கழிவுகளைப்  பயன்படுத்தி வீட்டுத் தோட்டம் அமைத்து  பயன் பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக  தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.  இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு நகராட்சி ஆணையர் நாகராஜன் தலைமைவகித்தார்.
நகரமைப்புஆய்வாளர்அருள்முருகன்,  முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஸ்டீபன் செல்வகுமார்,  ராஜேஸ்வரிபசுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுகாதாரஆய்வாளர் நா.வெங்கடாசலம், புதிய சுகாதார மேலாண்மைசட்டம் , திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களின் பங்கு, திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்குகள், தனிநபர் கழிப்பறை பயன்பாடு, கொசு ஒழிப்பு முறைகள் குறித்து கருத்துரையற்றினார்.
வீடுகளில் உரக்குழி அமைத்து திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்திய பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டுப்புறக் கலைஞர் மதிமகேந்திரன் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.  தூய்மை சேவை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் மகளிர்குழுக்கள், பள்ளி மாணவ, மாணவிகள்,  இளைஞர்கள் கலந்துகொண்டனர். பாலம் தொண்டு நிறுவன களப் பணியாளர் மெய்கண்டவேல் நன்றி கூறினார்.  நகராட்சி சுகாதாரப்பணி மேற்பார்வையாளர் பெரமையன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →