திருவாரூர்

மருத்துவக் கல்லூரியில் வெளி நோயாளிகளுக்கென பிரத்யேக எக்ஸ்ரே கருவி: எஸ்.பி. இயக்கிவைப்பு

DIN

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பயன்பெறும் வகையில், பிரத்யேக எக்ஸ்ரே மற்றும் அதிநவீன டெவலப்பர் கருவிகள் வியாழக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
புதிய கருவி பயன்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் இயக்கி வைத்தார்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறியது:
மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு உள்நோயாளிகள் பிரிவில் செயல்பட்டு வருகிறது. எக்ஸ்ரே படம் எடுக்க, டெவலப் செய்ய வெளிநோயாளிகள்  பிரிவிலிருந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு வந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில், வெளிநோயாளிகள் பிரிவுக்கான 100 எம்.ஏ. திறன் கொண்ட நட மாடும் எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டது. இந்த எக்ஸ்ரே படங்களை டெவலப் செய்ய அதிநவீன கணினி பிரிண்டர் இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. வெளிநோயாளிகள் பிரிவில் அதிகம் படம் எடுப்பதால், அந்த பிரிவிலேயே ஒரு இயந்திரம் வைக்க முடிவெடுக்கப்பட்டு ரூ. 15 லட்சம் செலவில் புதிய எக்ஸ்ரே கருவி வாங்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக நடமாடும் எக்ஸ்ரே கருவி அனைத்தும் 600 கதிர்வீச்சுத் திறனுக்கு குறைவாக இருக்கும். இதைக் கொண்டு முதுகு எலும்பு, இடுப்பு எலும்புகள் படம் எடுக்க இயலாது. தற்போது வாங்கப்பட்டுள்ள கருவி 100 கதிர்வீச்சுத் திறன் கொண்டது. எனவே, இதன்மூலம் அனைத்து பகுதிகளையும் துல்லியமாக படம் எடுக்க இயலும். மருத்துவமனையில் நுண்கதிர் துறையில் தற்போது 300 கதிர்வீச்சுத் திறன் கொண்ட எக்ஸ்ரே கருவி, 600 கதிர்வீச்சுத் திறன் கொண்ட டிஜிட்டல் கருவி, 4 நடமாடும் எக்ஸ்ரே கருவிகள், வெளிச்சத்தில் டெவலப் செய்யும் 2 அதிநவீன கருவிகள், 5 கலர் டாப்பர் கருவிகள் சிடி ஸ்கேன் நல்ல முறையில் இயங்கி வருகிறது.  
எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியும் பெறப்பட்டு, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 2017 ஜனவரி முதல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்கதிர் பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டு ஆண்டுக்கு 20 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நுண்கதிர் துறை மக்களுக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் தன்னிறைவு தரும் துறையாக செயல்படுகிறது என்றார் மீனாட்சிசுந்தரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT