முகப்பு
திருவாரூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  

திருவாரூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  
நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் எம்.ஜி. ஸ்ரீநிவாசன்  தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியது:  நமது நாட்டில் சாலை விபத்துகளில் மட்டும் ஆண்டிற்கு 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இறக்கின்றனர்.  எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் ஊனம் அடைகின்றனர்.  
 இந்நிலைக்கு காரணம் மக்களிடம் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு குறைவாக உள்ளது.  சாலை விதிமுறைகளை அறிந்தவர்கள் பெரும்பாலானோர் அதை  பின்பற்றுவதில்லை.  நாட்டில்  மது அருந்திவிட்டு வாகனம்  ஓட்டுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.  இந்நிலை மாற வேண்டும்.  இன்றைய இளைஞர்கள் சாலை விதிமுறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம்  என்றார்.  
நிகழ்ச்சியில்  கல்லூரி முதல்வர் கனகசபேசன்,  துணை முதல்வர் ஹேமா, ஆங்கில துறைத் தலைவர் சி.ரமேஷ்குமார் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →