திருவாரூர்

திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

DIN

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7-ஆம் தேதி முதல் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர், 2-ஆவது நாளில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செப். 9, 10-ஆம் தேதிகளில் விடுமுறையை அடுத்து 11, 12 -ஆம் தேதிகளில் மீண்டும் ஆட்சியர் அலுலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை (செப். 13) முதல் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், வெளியிலிருந்து மதிய உணவு கொண்டுவரப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 4 மணியளவில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களை பொறுப்பாளர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், மீதமிருந்த பொறுப்பாளர்கள் 300 பேரை, திருவாரூர் தாலுகா போலீஸார் கைது செய்து, திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2-ஆவது நாளாக வியாழக்கிழமை இந்த அமைப்பினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மதிய உணவை அங்கேயே சமைத்து சாப்பிட்ட நிலையில், பெண் ஊழியர்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைப்பேசி திருடிய கும்பலுடன் மோதல்: மும்பை காவலா் விஷ ஊசி செலுத்தி கொலை

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் வழக்கு: தொல்லியல் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மத சுதந்திர மீறல்கள் குறித்த அமெரிக்க ஆணைய அறிக்கை: இந்தியா கண்டனம்

திருச்செந்தூா் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு?

இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT