திருவாரூர்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தாற்காலிகமாக நிறைவு

DIN

திருவாரூரில் 3-வது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்தை தாற்காலிகமாக திரும்பப்பெற்று பணிக்குச் சென்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 7-ஆம் தேதி முதல் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை முதல் ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து மதியம் 2 மணியளவில் தங்களது போராட்டத்தை நிறைவு செய்து கொண்டு உடனடியாகப் பணிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT