முகப்பு
திருவாரூர்

வேதாரண்யம் செல்லும் பாத யாத்திரை தம்பதிக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை செல்லும் பாத யாத்திரை தம்பதிக்கு நீடாமங்கலத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:32 am IST
பகிர்:

திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை செல்லும் பாத யாத்திரை தம்பதிக்கு நீடாமங்கலத்தில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
அகில இந்திய காந்திய இயக்க தேசியச் செயலர் எம். கருப்பையா. மகளிரணிச் செயலர் கே. சித்ரா. இத்தம்பதியினர் திருச்சியிலிருந்து வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு இடத்துக்கு பாத யாத்திரை செல்கின்றனர். திருச்சியில் ஏப்.13-ஆம் தேதி பாத யாத்திரை பயணத்தை தொடங்கிய இவர்கள் புதன்கிழமை நீடாமங்கலம் வந்தபோது, அவர்களுக்கு உதவும் மனங்கள் அமைப்பின் தலைவர் எஸ்.எஸ். குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பாஜக நகரத் தலைவர் எல். ஜெயக்குமார், நூலகர் சு. ராகவன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் ம. வீரையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஏப்.30-ஆம் தேதி இத்தம்பதியினர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு இடத்தில் யாத்திரையை நிறைவு செய்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.