திருவாரூர்

சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகி மீது தாக்குதல்: ஊராட்சி செயலரிடம் விசாரணை

DIN

திருவாரூர் அருகே சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகி தாக்கப்பட்டதாக வந்த புகாரின்பேரில், ஊராட்சி  செயலரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்த விவரம் வருமாறு:
திருவாரூர் அருகேயுள்ள வடபாதிமங்கலத்தைச் சேர்ந்தவர் ப. தாமரைச்செல்வம். சட்ட பஞ்சாயத்து நிர்வாகியான இவர், வடபாதிமங்கலம் ஊராட்சியில்  2016-17 வரையிலான வரவு செலவுகளைப் பார்வையிட விரும்பி, இந்திய ராஜ்யசபா சட்டம் மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய சட்டத்தின் கீழ் மன்னார்குடி  வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, அந்த அலுவலகத்திலிருந்து மார்ச் 12, 13,  14  ஆகிய  தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45-க்குள் பார்வையிடலாம் என அனுமதி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதன்பேரில், திங்கள்கிழமை (மார்ச் 12) ஆய்வு செய்வதற்காக வடபாதிமங்கலம் ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றார். ஆனால், அங்கிருந்த அலுவலர்கள் வேறு பணிகள் இருப்பதால் மற்றொரு நாள் வரும்படி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு தாமரைச்செல்வத்தின் அலுவலகத்துக்கு வந்த சிலர் அலுவலகத்தைச் சேதப்படுத்தியதுடன் அவரை அடித்துக் காயப்படுத்தினார்களாம். காயமடைந்த தாமரைச்செல்வம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஊராட்சி செயலர் ரமேஷிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தாமரைச்செல்வம் கூறுகையில், வடபாதிமங்கலம் ஊராட்சியில் அரசு சார்பில் நடைபெற்ற பல்வேறு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கடந்த ஓராண்டாக உரிய ஆவணங்களைத் திரட்டி வந்துள்ளேன். கட்டாமலேயே தகன கொட்டகைக்கு தொகை வழங்கியது, ரூ. 500 மட்டுமே எடுக்க அதிகாரம் உள்ள ஊராட்சி செயலர் ரூ. 4.90 லட்சம், 3.82 லட்சம் எடுத்தது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்து முறையாக அனுமதி பெற்று ஆய்வு செய்ய சென்றதற்காக, ஊராட்சி செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் அலுவலகத்துக்கு வந்து சேதப்படுத்தியதுடன் தன்னை தாக்கியதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT