திருவாரூர்

அனுமதியின்றி மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்

DIN

நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு லாரிகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். 
நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். அதன்படி, நீடாமங்கலம் வட்டாட்சியர் குணசீலி தலைமையிலான வருவாய்த் துறையினர் புதன்கிழமை நீடாமங்கலம் - மன்னார்குடி சாலை ராயபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு லாரியையும், இதேபோல், நீடாமங்கலம் அருகே கற்கோயில் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மற்றொரு லாரியையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 லாரிகள், ஒரு மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT