திருவாரூர்

500 அடி தூரம் தூக்கியெறிப்பட்ட தகரத்தைத் தாங்கி நிற்கும் மின்மாற்றி!

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கஜா புயலால் சுமார் 500 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட இரும்பு தகரத்தை மின்மாற்றி (டிரான்ஸ்ஃபார்ம்) தாங்கி நின்றது.
கஜா புயல் டெல்டா மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூத்தாநல்லூர் உமர் அலி நகரில், உள்ள வீட்டின் 4-ஆவது மாடியில், தகரத்தால் மேற்கூரை போடப்பட்டிருந்தது. கஜா புயலால் இந்த தகர மேற்கூரை பெயர்ந்து, சுமார் 500 அடி தூரத்துக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளது. தூக்கியெறியப்பட்ட தகரம், காவல் நிலையம் அருகே உள்ள மின்மாற்றியில் சிக்கி, அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. விபரீதத்தை உணர்ந்த மின்வாரிய ஊழியர்கள், அந்தத் தகரத்தை ஞாயிற்றுக்கிழமை அப்புறப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT