திருவாரூர்

கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். 

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார். 
கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வந்த திமுக தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், கோட்டூர் அருகேயுள்ள குமாரமங்கலம் என்ற இடத்தில் காரில் இருந்தபடி புயல் பாதிப்பு சேதங்களை பார்வையிட்டார். பின்னர், மாலை 4.45 மணிக்கு மன்னார்குடிக்கு வந்தார். மதுக்கூர் சாலை இலக்கணம்பேட்டையில் உள்ள திமுக முதன்மைச் செயலர் டி.ஆர். பாலுவுக்குச் சொந்தான விருந்தினர் பங்களாவுக்குச் சென்று மதியம் உணவு சாப்பிட்டார். பின்னர் மாலை 5.25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு வடசேரி வழியாக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள புயல் சேதங்களைப் பார்வையிடச் சென்றார். இந்நிலையில், மன்னார்குடி பகுதியில் சேதங்களைப் பார்வையிட ஸ்டாலின் வருவார் என எதிர்பார்த்து மனு அளிக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT