கோதண்டராம சுவாமி கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை விழா
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூர் கோதண்டராம சுவாமி கோயிலில், ஏகதின லட்சார்ச்சனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் சமேதராக கோதண்டராம சுவாமி எழுந்தருளினார். அப்போது, 5-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள், பெருமாளுக்கு சகஸ்ர நாமம் சொல்லி, சுமார் 4 மணிநேரம் அர்ச்சனை செய்தனர். இதைத்தொடர்ந்து, விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது.
ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் சார்பில், சுவாமிகளுக்கு 3 வகையான அன்னப்பாவாடை படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.