திருவாரூர்

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நாளை திருவாரூர் வருகை

DIN

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) திருவாரூருக்கு வருகிறார். 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1.1.2019-ஆம் தேதியைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இடம்பெயர்ந்த அல்லது இறந்துபோன வாக்காளர் பெயர் நீக்கல் மற்றும் முகவரி, பெயர், வயது, உறவுமுறை, புகைப்பட திருத்தம் தொடர்பான பணிகள் செப்.1 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளுக்காக, திருவாரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் எம். வள்ளலார் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் திருவாரூர் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்க்கை, நீக்கல் மற்றும் திருத்தப் பணிகளை பார்வையிடுகிறார்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் குறித்த ஆய்வுக்கூட்டத்தையும்  நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT