முகப்பு
திருவாரூர்

எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 5:01 AM
பகிர்:

திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 
இந்துஸ்தான பெட்ரோலியம் சார்பில், குருதேவன் எரிவாயு முகவாண்மை மற்றும் கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய சாக்ஸம் 2018 என்ற நிகழ்ச்சியில்,  சிறப்பான சுற்றுப்புற சூழ்நிலைக்குத் தேவை எரிபொருள் சிக்கனம்  எனும் தலைப்பில்கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து நடைபெற்ற எரிபொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில், நாள்தோறும் இரவு சமையல் பணி முடிந்தவுடன் ரெகுலரேட்டரை மூடவேண்டும், ரெகுலேட்டரில் இருந்து கேஸ் கசிவதால்தான் பெரும்பாலான விபத்துகள் நிகழ்கின்றன. சிலிண்டரில் இருந்து எரிவாயு வெளியேறும்போது எளிதில் உணர்ந்துகொள்ள உதவியாக எத்தில் மெர்கேப்டன் என்ற கெமிக்கல் வாசனையை உணர்ந்ததும் உடனடியாக எரிவாய்வை நிறுத்திவிட வேண்டும், இல்லையென்றால்  சிலிண்டரிலிருந்து திரவம் தரையில் பரவிவிடும் சின்ன தீப்பொறி ஏற்பட்டாலோ , எலெக்ட்ரிக்கல் ஸ்விட்சை ஆன் செய்தாலோ பெரிய விபத்து ஏற்பட்டுவிடும், மேலும் சிலிண்டரில் கேஸ்  தீர்ந்தவுடன் மறுபடியும் சிலிண்டரை குலுக்கி பார்க்கக் கூடாது என்று பாதுகாப்பு கருத்துகள் கூறப்பட்டன.  
பள்ளித் தலைமையாசிரியர் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், திருத்துறைப்பூண்டி இந்துஸ்தான் பெட்ரோலியம் கேஸ் ஏஜென்ஸி மேலாளர் சரண்யா, கல்வி புரவலர்கள் ஷேக் தாவூத் இப்ராகிம்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.