சேவையைப் பாராட்டி ஆன்மீக மாமணி விருது
திருவாரூரில் உள்ள ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜனின் ஆன்மிக சேவையைப் பாராட்டி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆன்மீக மாமணி விருது வழங்கப்பட்டது.
திருவாரூரில் உள்ள ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஜெ. கனகராஜனின் ஆன்மிக சேவையைப் பாராட்டி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை ஆன்மீக மாமணி விருது வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், குத்தாலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீஆதிசங்கரர் பேரவை சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஸ்ரீ ஆதி சங்கரர் நினைவைப் போற்றும் வகையில் சிறந்த அறிஞர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவன தலைவர் ஜெ. கனகராஜனுக்கு அவரின் ஆன்மீக சேவையை பாராட்டி, ஆன்மீக மாமணி விருதை திருவாவடுதுறை ஆதினம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வழங்கியதுடன், சிறந்த அறிஞர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கி ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில், ஆதிசங்கரர் பேரவை அமைப்பின் நிர்வாக இயக்குநர் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பங்கேற்றனர்.