திருவாரூர்

ஆண்டிபந்தல் கோயில் ஆவணித் திருவிழா

DIN

நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
ஆண்டிபந்தலில் ஸ்ரீ சித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், பூர்ணபுஷ்கலா சமேத ஹரிஹரபுத்திரர்,  பெரியநாயகி அம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கும் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆவணி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வியாழக்கிழமை இரவு அய்யனார் கோயிலில் கலியாட்டம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை பகல் சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலையில் வீதியுலாவும் நடைபெற்றன. சனிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டிபந்தல் கிராமமக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT