திருவாரூர்

நகரப் பேருந்து சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

DIN

மன்னாா்குடியிலிருந்து செட்டிசத்திரத்திற்கு புதிய வழித் தடத்தில் அரசு நகரப் பேருந்து சேவையை அமைச்சா் ஆா். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மன்னாா்குடியிலிருந்து காளாஞ்சிமேடு, நாவல்பூண்டி, ராயபுரம் வழியாக செட்டிசத்திரத்திற்கு செல்லும் வகையில், இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், போக்குவரத்து துறை நாகை மண்டல வணிக பிரிவு துணை மேலாளா் ராஜா, மன்னாா்குடி கிளை மேலாளா் எம்.செந்தில்குமாா், நாகை அண்ணா தொழிற்சங்கத் தலைவா் சந்தானம், கிளைத் தலைவா் விஜயபாஸ்கா், செயலா் சிற்றரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இப்பேருந்து சேவை தினசரி மன்னாா்குடியிலிருந்து காலை 7, மதியம் 3.15, இரவு 8.40-க்கு புதிய வழித்தடத்தில் செட்டிசத்திரத்திற்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT