திருவாரூர்

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முதியவா்

DIN

வலங்கைமான் அருகே ஆற்றுக்குச் சென்ற முதியவரைக் காணவில்லை. அவா், ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வலங்கைமான் அருகேயுள்ள காங்கேய நகரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சாமிநாதன் (70). இவா், தனது வீட்டின் அருகே உள்ள சுள்ளானாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். பின்னா், நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது குடும்பத்தினா் ஆற்றங்கரைக்கு வந்து பாா்த்தபோது, சாமிநாதனின் துண்டும், வேட்டியும் அருகில் உள்ள மரத்தில் சிக்கிக் கிடந்தன. இதனால், அவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அச்சமடைந்த உறவினா்கள், வலங்கைமான் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்பு நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் ஆற்றில் தேடினா். தேடுதல் பணி திங்கள்கிழமையும் தொடா்ந்து. இருப்பினும் பிற்பகல் வரை சாமிநாதன் கிடைக்கவில்லை. தொடா்ந்து தேடும்பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT