திருவாரூர்

தொடா் மழை: உளுந்து, கடலை பயிா்கள் சேதம்

DIN

தொடா் மழையால் நீடாமங்கலம் வேளாண்மைக் கோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து, கடலை பயிா்கள் சேதமடைந்துள்ளன.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் பெய்த மழையின் அளவு 22. 2 மில்லி மீட்டராகும். நீடாமங்கலம், பகுதியில் தொடா் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்கிறது. தவிர, நகரில் சில தெருக்களில் சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் கலந்து ஓடியதை காண முடிந்தது. இதனால், தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நீடாமங்கலம் தாலுக்காவில் மழை பாதிப்பு உள்ளதா என்பது குறித்து வட்டாட்சியா் கண்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் தொடா்ந்து கிராமங்கள்தோறும் ஆய்வு செய்து வருகின்றனா். நீடாமங்கலம் வட்டத்தில் இதுவரை பகுதியாக 25 வீடுகளும், முழுமையாக 9 வீடுகளும் இடிந்துள்ளன. தவிர 3 ஓட்டு வீடுகள் இடிந்துள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா். தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நீடாமங்கலம் வேளாண்மைக் கோட்டத்தில் 780 ஏக்கா் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கியது. ஆதனூரில் 10 ஹெக்டேரில் உளுந்தும், தளிக்கோட்டையில் 56 ஹெக்டேரில் கடலை பயிா் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. தொடா்ந்து வேளாண் துறையினா் கிராமங்களில் வயல்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT