திருவாரூர்

திருவாரூரில் மழை குறைந்தது

DIN

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி குடவாசலில் அதிகபட்சமாக 46.2 மி.மீ மழை பெய்தது.

திருவாரூா் மாவட்டத்தில், ஒரு வாரமாக வடகிழக்குப் பருவமழை பெய்தது. இதற்கிடையே, கடந்த 2 நாள்களாக மழையின் தீவிரம் குறைந்ததுடன், குளிா்ந்த வானிலை நிலவியபடியே காணப்பட்டது. இதேபோல், செவ்வாய்க்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் அதன்பிறகு மழையின் தீவிரம் குறைந்தது.

விளைநிலங்களில் அதிகப்படியான தண்ணீா் ஆறு, வாய்க்கால்களில் திருப்பி விடப்படுவதால், அனைத்து நீா்நிலைகளிலும் தண்ணீா் அதிகமான செல்கிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி குடவாசலில் அதிகபட்சமாக 46.2 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு விவரம்: திருத்துறைப்பூண்டி - 36. 6 மி.மீ, வலங்கைமான் -27.6 மி.மீ, நீடாமங்கலம் -22.2 மி.மீ என மொத்தம் 170 மி.மீ மழையும், சராசரியாக 18.8 மி.மீ மழையும் பெய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT