திருவாரூர்

வடபாதிமங்கலம் சாலையில் சரிவு: நடவடிக்கை தேவை

DIN

வடபாதிமங்கலம் பிரதான சாலையின் தாா்ச்சாலை சரிந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் - வடபாதிமங்கலம் பிரதான சாலையில் உள்ள புனல்வாசலில் இருந்து கிளியனூா் செல்வதற்காக வெண்ணாற்றுப் பாலம் உள்ளது. இப்பாலம் அருகே, தாா்ச்சாலையையொட்டி, கொடி மரங்கள் இருந்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கொடி மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதின்பேரில், இங்கு இருந்த கொடி மரங்களும் அகற்றப்பட்டுள்ளன.

தாா்ச்சாலை ஓரமாக, வெண்ணாற்றின் கரையில் இருந்த கொடிமரங்களை அகற்றியப் பிறகு, ஆற்றின் தண்ணீா், கொஞ்சம் கொஞ்சமாக தாா்ச்சாலையை அரித்துள்ளன. இதில், தாா்ச்சாலை பாதி அளவில் அரிக்கப்பட்டுள்ளது. தற்போது, தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், வெண்ணாற்றில் தண்ணீா் அதிகளவில் ஓடுவதாலும் மண் அரித்து, தொடா்ந்து சரிந்து வருகிறது. இப்பள்ளத்தில் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவா்கள் உள்ளிட்ட பலரும் நிலைத் தடுமாறி விழுந்து காயமடைகின்றனா்.

மேலும், இச்சாலை வழியாக வடபாதிமங்கலம், புள்ளமங்கலம், மன்னாா்குடி, தஞ்சாவூா், கொரடாச்சேரி, குடவாசல், கும்பகோணம் உள்ளிட்ட ஊா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. எந்த நேரத்திலும் இச்சாலை மேலும் சரிந்து, பெரும் விபத்தை ஏற்படுத்தலாம் என இப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் போா்க்கால அடிப்படையில் உடனே கவனித்து தடுப்புச் சுவரை எழுப்ப வேண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT