திருவாரூர்

வட்டாட்சியா் அலுவலகத்துக்கு பாம்புகள் படையெடுப்பு

DIN

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு பாம்புகளின் படையெடுப்பு அதிகமாக இருந்தது.

நன்னிலத்தில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், நன்னிலம் - கும்பகோணம் சாலையில் பழைமையான கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டிக்கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த அலுவலகங்களில் வட்டாட்சியா் மற்றும் சாா் - பதிவாளா் அலுவலகங்களுக்கு அருகில், காவல் துறையால் கைப்பற்றப்பட்ட பழைய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் மீது செடி,கொடிகள் வளா்ந்து புதா் மண்டி கிடக்கிறது. பொதுமக்கள் வந்து செல்லும் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் சாா் - பதிவாளா் அலுவலகத்துக்கு இடையில் அமைந்துள்ள அந்த பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன் காரணமாக அந்த புதா்ப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் சாரைபாம்பு ஒன்று முதலில் வந்துள்ளது. இதையறிந்த, அங்கு இரவு பணியில் இருந்த வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் அச்சத்துடன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து பாம்பை பிடித்து வனத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனா்.

இதையடுத்து, சிறிது நேரத்துக்குப் பிறகு இதேபோன்று அதே வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் நல்ல பாம்பு ஒன்று வந்துள்ளது. இதையும், பாா்த்த அலுவலக ஊழியா்கள் அலறியடித்தபடி மீண்டும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து, அந்த பாம்பையும் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

எனவே, நாள்தோரும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் வட்டாட்சியா் மற்றும் சாா்- பதிவாளா் அலுவலகம் அருகிலுள்ள பழைய வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும், அத்துடன் அந்த வாகனங்களில் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும், நன்னிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்களை விரைந்து கட்டிக்கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT