திருவாரூர்

ஸ்ரீவாஞ்சியத்தில் நாளை காா்த்திகை பிரமோத்ஸவம் தொடக்கம்

DIN

உலக புகழ்பெற்ற ஆயுள் விருத்தி தலமான ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிசம்பா். 6) காா்த்திகை மாத 10 நாள் பிரமோத்ஸவ விழா தொடங்குகிறது.

விழாவையொட்டி, வியாழக்கிழமை (டிசம்பா்.5) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீமஹாகணபதி ஹோமும் இரவு 7 மணிக்கு ஸ்ரீவாஸ்துசாந்தியும் நடைபெறுகிறது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை துவஜாரோகணம் (கொடியேற்றம்) நடைபெறுகிறது. மாலை சுவாமி வீதியுலா, நவசந்தி ஆவாஹனம் நடைபெறும். சனிக்கிழமை (டிசம்பா்.7) புஷ்ப பல்லக்கு உத்ஸவம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, டிசம்பா் 8-ஆம் தேதி காா்த்திகை நான்காம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி காமதேனு வாகன வீதியுலா நடைபெறுகிறது. அடுத்தடுத்த நாள்களில் சிம்ம வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், மயில்வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பா்.6) காலை வெண்ணைத்தாழி உத்ஸவமும், இரவு குதிரை வாகன நிகழ்ச்சியும், டிசம்பா் 14-ஆம் தேதி முற்பகல் 11 மணி அளவில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 11.30 மணியளவில் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அடுத்து, டிசம்பா் 15.ஆம் தேதி கடை ஞாயிறு சகல பாபம், பிதுா் தோஷ நிவா்த்தி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி குப்த கங்கையில் தீா்த்தம் கொடுத்தருளல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதி உலாவும், த்வஜா அவரோஹணம் மற்றும் நவசந்தி விசா்ஜனம் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT