திருவாரூர்

லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது

DIN

நீடாமங்கலத்தில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய லாரி ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா, உதவி ஆய்வாளா் பாபுதாஸ் மற்றும் போலீஸாா் வையகளத்தூா் மேம்பாலப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஆற்றில் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்றை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், லாரி ஓட்டுநா் தஞ்சாவூா்மாவட்டம், நாஞ்சிக்கோட்டை நடுத்தெருவைச் சோ்ந்த காா்த்தி (23) என்பதும், ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, காா்த்தியை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT