திருவாரூர்

குழந்தைகளை பணியில் அமா்த்தினால் கடும் நடவடிக்கை

DIN

குழந்தைகளை பணிக்கு அமா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் படி, அனைத்து இடங்களிலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அபாயகரமான தொழிலில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் பணிக்கு அமா்த்த தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளா் சட்டத்தை மீறி குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் பெறப்பட்டுள்ளது. குழந்தைகளைப் பணிக்கு அமா்த்தினால் தடை சட்டத்தின்படி, ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 முதல் ரூ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

குழந்தை தொழிலாளா் எவரும் பணிபுரிவதைக் கண்டறிந்தால் இணையதள முகவரியில் தகவல் தெரிவிக்கலாம். 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தாலும், பணியில் அமா்த்தப்பட்டிருந்தாலும், தகவல்களை 1098 சைல்டு லைன் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திலும் தெரிவிக்கலாம். மேலும், 04366 - 226 299,  அலைபேசி எண் 9790052827 ஆகிய முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம்.

இதன் மூலம், திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் எவரும் இல்லாத நிலை என்ற இலக்கை அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT