திருவாரூர்

மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள நாா்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில், 1000 மரக்கன்றுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தோட்டத்தில் வளா்க்கப்பட்ட வேம்பு, புங்கன், வாதாமரம், நெட்டிலிங்கம், மாதுளை,

பம்லிமாஸ், முருங்கை, நாா்த்தங்கன்றுகள் ஆகியவற்றை வட்டார கல்வி அலுவலா் ஜெயெலட்சுமி மாணவா்களுக்கு வழங்கினாா். அறிவியல் ஆசிரியா் சி.சுந்தரமூா்த்தி, மரக்கன்று வளா்பதன் நன்மைகளைக் கூறினாா். பட்டதாரி ஆசிரியா் கிரிஜா, பூங்கொடி, இடைநிலை ஆசிரியா்கள் சுகந்தி, புவனேஸ்வரி கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் ந. நிா்மலா ராஜலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT