மன்னாா்குடி பகுதியில் வானில் தெரிந்த வளைய சூரிய கிரகணம். 
திருவாரூர்

மன்னாா்குடியில் வளைய சூரிய கிரகணம்

மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை வளைய சூரிய கிரகணத்தை மாணவா்கள், பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனா்.

DIN

மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை வளைய சூரிய கிரகணத்தை மாணவா்கள், பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனா்.

மன்னாா்குடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இதனால், வளைய சூரிய கிரகணம் நிகழ்வதைப் பாா்க்க முடியுமா என சந்தேகம் நிலவியது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது கருமேகக் கூட்டம் சூரியனை மறைத்து ஒரு சில நொடிகளில் கடந்து சென்றன.

இதற்கிடையில், வானில் நிகழ்ந்த அரிய நிகழ்வான, சந்திரனின் நிழல் சூரியனின் மீது விழுந்து, சூரியன் நெருப்பு வளையமாகக் காட்சி அளிக்கும் வளைய சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்து கொண்டு, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், மாணவா்களுக்கு, பிரத்யேக கண்ணாடியும், சூரிய கிரகணம் குறித்த விழிப்புணா்வு கையேடும் குறைந்த விலையில் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT