திருவாரூர்

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில் தேரோட்டம்

DIN

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள புகழ் பெற்ற ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயிலில் மாசிமக பிரமோத்ஸவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி சட்டத் தேருக்கு எழுந்தருளினார். மதியம் 12.30 மணியளவில் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருத்தேரின் வடத்தை பிடித்து பக்தர்கள் இழுத்தனர். தொடர்ந்து, தேர் நான்கு ரத வீதிகளையும் வலம் வந்து மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19) காலை 8 மணிக்கு பிச்சாண்டவர் புறப்பாடு, 9 மணிக்கு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் வீதிக்கு எழுந்தருளி குப்த கங்கையில் தீர்த்தவாரி, பகல் 11 மணிக்கு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷபத்தில் குப்த கங்கையில் மாசிமக தீர்த்தவாரி, இரவு 7 மணிக்கு ஸ்ரீத்வஜா அவரோகணம் நவசக்தி விசர்சனம் ஸ்ரீ சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது. புதன்கிழமை (பிப்ரவரி 20) காலை பஞ்சமூர்த்திகளுக்கு பிராயச்சித்த அபிஷேகமும், காலபைரவர் அபிஷேகமும் மாலையில் சட்டைநாதர் சுவாமி புறப்பாடும் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT