திருவாரூர்

காவல் ஆய்வாளருக்கு இடையூறு: 20 பேர் மீது வழக்குப் பதிவு

DIN


நீடாமங்கலம் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 20 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 நீடாமங்கலம் கோரையாற்றுப் பகுதியில் உள்ள மீன் அங்காடியில், வியாபாரம் முடிந்ததும் அங்கு கடை வைத்திருக்கும் சிலருடன் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சிலர் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனராம். அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முனிசேகர், பொது இடத்தில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டித்துள்ளார். 
இதில் கணேசன் என்பவர் காவல் ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டதால், அவரை போலீஸ் வேனில் முனிசேகர் ஏற்றினாராம். இதையடுத்து, அங்கு வந்த கணேசனின் தந்தை சாமிநாதன், சகோதரர்கள் மணி, குமரன் உள்ளிட்டோர் போலீஸ் வேனை நகரவிடாமல் தடுத்து அதை மறித்தனர். புகாரின்பேரில், காவல் ஆய்வாளரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக கணேசன் உள்ளிட்ட 20 பேர் மீது நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT