திருவாரூர்

உலக நுகர்வோர் தின விழா

DIN

மன்னார்குடியில் ஜேசிஐ பவர் அமைப்பு சார்பில் உலக நுகர்வோர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
 ஜேசிஐ பவர் அமைப்பின் தலைவர் பி. சரவணன் தலைமை வகித்தார். மன்னார்குடி நுகர்வோர் சங்க பொதுச் செயலாளர் சா. சம்பத், உணவுப் பொருள்களில் கலப்படங்களை கண்டறியும் முறை பற்றியும், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பேசினார். மூளை வளர்ச்சிக் குறைவு, சிந்திக்கும் ஆற்றல் குறைவு,  உடல் வளர்ச்சிப் பதிப்பு போன்றவை  அயோடின் பற்றாக்குறையால் ஏற்படுகிறது என்றும், எனவே, அயோடின் கலந்த உப்பை அவசியம் பயன்படுத்த வேண்டும் எனவும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் வீடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உப்பில் அயோடின் கலந்துள்ளதா  என்று பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் நுகர்வோர் சங்க செயலாளர் த. கலைவாணன், பொருளாளர்
வி. ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT