திருவாரூர்

வாக்குப் பதிவு விழிப்புணர்வு மனித சங்கிலி

DIN

திருவாரூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.  
 திருவாரூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல், திருவாரூர் சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட மேல வீதியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகளிர் கலைக்கல்லூரியில், இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதமாக கையெழுத்து இயக்கம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்கும் செல்லிடப்பேசி செயலி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மருத்துமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்று வாக்காளர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில்....
திருத்துறைப்பூண்டி, மார்ச் 20: திருத்துறைப்பூண்டியில் நகராட்சி சார்பில், மக்களவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
இதை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாஸ்கர் தொடங்கி வைத்தார். புதிய பேருந்து நிலையம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் நா. வெங்கடாசலம் மற்றும் மகளிர் குழுவினர், நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எனது வாக்கு எனது உரிமை, 100 சதவீதம் வாக்குப்பதிவு, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை என பேரணியில் பங்கேற்றோர் முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT