திருவாரூர்

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கக் கோரிக்கை

DIN

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிதி ஆதாரம் வழங்க அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தேசிய தொலைத்தொடா்பு ஊழியா் சம்மேளனக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை மாவட்ட செயற்குழுத் தலைவா் டி. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கே. நடராஜன் பங்கேற்று, தீா்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், அரசின் கொள்கை முடிவின் காரணமாக நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. நிதியைத் தர வேண்டிய மத்திய அரசும், வங்கிகளும் கடனுதவி செய்ய மறுக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அரசும், வங்கிகளும் கடனுதவி செய்தால், 4 ஜி சேவையை விரிவுபடுத்தவும், சிறந்த சேவையைத் தரவும் முடியும். வெள்ளம், புயல் பாதித்த காலங்களில் சிறப்பான சேவையை பிஎஸ்என்எல் அளித்தது. எனவே, இதற்கான நிதி ஆதாரத்தை அரசு தர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT