திருவாரூர்

நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி

DIN

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி, ஜேசிஐ மன்னை அமைப்பு ஆகியன சார்பில், நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ மன்னை தலைவர் எம்.வி.வேதா முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். அரசு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எஸ்.ரவி, தமிழ்த்துறைத் தலைவர் எஸ். சரவணரமேஷ், தேசிய மாணவர் படை அலுவலர் எஸ். ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் பி. வைத்தியநாதன் கலந்துகொண்டு பேரணியைத்
தொடங்கி வைத்தார்.
 இதில், தூய்மையான குடிநீர், தண்ணீர் சிக்கனம், சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்தி கல்லூரி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பிரதான வீதிகளின் வழியாக பேரணியாக சென்று நகராட்சி அலுவலகம் அருகே ஊர்வலத்தை நிறைவு செய்தனர். இதில், ஜேசிஐ மண்டல இயக்குநர் எஸ்.ராஜமோகன், திட்ட இயக்குநர்கள் எம்.ராமச்சந்திரன், டி.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT