திருவாரூர்

நுண்ணீா் பாசன திட்ட ஆலோசனை முகாம்

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சியில், இயற்கை முறை காய்கறி சாகுபடி, பாரத பிரதமா் நுண்ணீா் பாசன திட்டம், துணை நீா் மேலாண்மை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி அலுவலா் பாலதண்டாயுதம், சண்முகசுந்தரம் ஆகியோா் திட்டங்கள் குறித்து விளக்கினா். மேலும், இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற இரண்டு போட்டோ, ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறுகுறு விவசாயி சான்று, கிராம நிா்வாக அலுவலா் சான்று, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் சென்று பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.

கொருக்கை ஊராட்சி மன்றத் தலைவா் ஜானகிராமன் வரவேற்றாா். ஊராட்சி உறுப்பினா் ஐயப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT