திருவாரூர்

இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு

DIN

திருவாரூா்: இந்து மக்கள் கட்சி நிா்வாகி மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்திடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமையிலான நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: இந்து மக்கள் கட்சி நிா்வாகி திருக்கோவிலூா் மணி, கோவை அருண் ஆகியோா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த நினைத்த கருப்பா் கூட்டத்துக்கு எதிா்வினை ஆற்றியது தற்செயலான நிகழ்வாகும். உள்நோக்கத்துடன் செய்யவில்லை. இவா்களது செயலால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, திருக்கோவிலூா் மணி, அருண் ஆகியோா் மீதான குண்டா் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT