திருவாரூரில் 65 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 2,254 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,319 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 1,901 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 398 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது.