முகப்பு
திருவாரூர்

பொதுப் பணித் துறை அலட்சியம்: கூத்தாநல்லூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், பொதுப்பணித் துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பொதுப் பணித் துறை அலட்சியம்: கூத்தாநல்லூரில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பகிர்:

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், பொதுப்பணித் துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், பொதுப்பணித் துறையின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் எஸ்.டி.பி.அய். உள்ளிட்ட கட்சிகள் சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் பாமணி, கோரையாறு மற்றும் வெண்ணாறு என மூன்று கிளை ஆறாகப் பிரிகிறது. தொடர்ந்து, நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனவும், அத்திக்கடை, வாழச்சேரி என்ற இடத்தில், வெண்ணாறு, வெள்ளியாறு எனவும் இரண்டாகப் பிரிகிறது.

இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பண்டுதக்குடி , வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாக அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. வெண்ணாற்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட் வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாகப் பிரிந்து பாசன வாய்க்கால்களாக உள்ளன. ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டும், கிளை வாய்க்கால்களில் தூர்வாரப்படாததால், கடைமடை வரை விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல முடியவில்லை.

இந்நிலையில், வெண்ணாற்றின் பாய்க்காரப் பாலத்தின் கீழ், வெங்காயத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடக்கிறது. குவிந்துள்ள வெங்காயத்தாமரையை அகற்றக்கோரி, பொதுப்பணித் துறையினரிடம் பலமுறை வலியுறுத்தியும் அலட்சியப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, பாய்க்காரப் பாலத்தின் மேல் , இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் எஸ்.டி.பி.அய். கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணிச் செயலாளர் ஹெச்.எம்.டி. ரஹமத்துல்லாஹ், எஸ்.டி.பி.அய்.கட்சி மாவட்டச் செயலாளர் டி.எம்.ஹெச்.அப்துல் ராஜிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், விவசாய சங்க நகரச் செயலாளர் கே.நாகராஜ், விவசாய தொழிலாளர்கள் சங்க நகரச் செயலாளர் எம்.சிவதாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.ஜெகபர் அலி, நகர அமைப்புக் குழு செயலாளர் கே.எம்.நைனாஸ் முகம்மது, எஸ்.டி.பி.அய்.கட்சி நகரத் தலைவர் அய். ஜாஹிர் உசேன், நகர செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.காதர் மைதீன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைெவளியுடன் முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ஆர்.லதா கூறியதாவது, “வெண்ணாற்றில் குவிந்துள்ள வெங்காயத்தாமரையை உடனே  அகற்றக்கோரி, பொதுப்பணித் துறை அதிகாரியுடன் பேசியுள்ளேன். ஆற்றில் ஓடும் தண்ணீர் குறைந்ததும் அள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.” என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →